இயேசுவைப் பின்பற்றுவது எப்படி
Video not available
உங்கள் புதிய வாழ்க்கையின் 4 உறவுகளை விளக்கும் இந்த முக்கியமான வீடியோவைப் பாருங்கள்
இயேசுவைப் பின்பற்றுபவர் (சீஷன்) என்பதன் அர்த்தம் என்ன என்பதை கீழே உள்ள பகுதிகள் உங்களுக்குக் கற்பிக்கும்
பதிவு செய்யவும்கடவுள் எப்படி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த எளிய விஷயங்களைச் செய்யும் சாதாரண மக்களைப் பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பீர்கள்.
சீஷராக இருப்பது, சீஷராக்குவது, தேவாலயம் ஆகியவை என்றால் என்ன என்பதின் சாராம்சத்தைக் கண்டறியவும்.
இயேசுவிற்கு ஒரே ஒரு சீஷராக மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைகளாகப் பெருகும் பல ஆவிக்குறிய குடும்பங்களையும் உருவாக்கும் எளிய முறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
அனுதினமும் பின்தொடர்பவர்களை இயேசுவைப் போலவே மாற்றும் நான்கு முக்கிய வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள்.
ஜெபம்
சீஷராக இருப்பது என்றால் நாம் கடவுளிடமிருந்து கேட்கிறோம், கடவுளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
ஒரு மணி நேரம் ஜெபத்தில் செலவிடுவது எவ்வளவு எளிது என்று பாருங்கள்.
மற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கான வழிகளை உங்களுக்கு நினைவூட்டுவதற்கு ஒரு எளிய நினைவாற்றலைப் பயிற்சி செய்யுங்கள்.
வேத வாசிப்பு
தினசரி வேத வாசிப்புக்கான ஒரு முறைமை, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளவும், கீழ்ப்படியவும், பகிரவும் உதவுகிறது.
சீஷர்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியம் - ஆனால் அவர்கள் அறிந்ததை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிக முக்கியமானது.
சமூகம்
ஒரு 3/3 குழு என்பது இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு சந்திக்க, பிரார்த்தனை செய்ய, கற்றுக்கொள்ள, வளர, உறவாட மற்றும் அவர்கள் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வழியாகும். இந்த வழியில், 3/3 குழு என்பது ஒரு சிறிய குழு மட்டுமல்ல, எளிய தேவாலயமாகும்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று நபர்கள் வாரந்தோறும் சந்திப்பதற்கும், சிறப்பாகச் செல்லும் பகுதிகளில் ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பதற்கும், திருத்தம் தேவைப்படும் பகுதிகளை வெளிப்படுத்துவதற்கும் ஒரு முறைமை அல்லது வாய்ப்பு.
சென்று தங்குவதன் மூலம் இயேசுவின் கட்டளைகளுக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிக.
இது நம்முடைய நெருங்கிய தொடர்பையும் இயேசுவுடனான தொடரும் உறவையும் கொண்டாட ஒரு எளிய வழியாகும். கொண்டாட ஒரு எளிய வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
இயேசு, “நீங்கள் போய் எல்லா தேசத்தினரையும் சீஷராக்குங்கள், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுங்கள்…” இதை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதை அறிக.
தியாகமும் துன்பமும்
கடவுளின் பொருளாதாரம் உலக பொருளாதாரத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிக. ஏற்கெனவே கொடுக்கப்பட்டவற்றில் உண்மையுள்ளவர்களிடம் கடவுள் அதிக முதலீடு செய்கிறார்.
தேவனுடைய ராஜ்யம் எங்கே இல்லை என்பதை பார்க்கத் தொடங்குங்கள். இவை பொதுவாக கடவுள் அதிகம் வேலை செய்ய விரும்பும் இடங்கள்.
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி: "வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும் படி அவர்களுக்கு உபதேசம் பண்ணூங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார், ஆமென்"
உங்களுடன், இயேசுவுக்குக் கீழ்ப்படியவும் பின்பற்றவும் மற்றவர்களுக்குக் கற்பித்தல்
வாத்து குஞ்சுகளுக்கும், சீஷர்களை உருவாக்குவதற்கும் உள்ள ஒற்றுமையை அறிக.
பயிற்சி சுழற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள், சீஷர்களை உருவாக்குவதற்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் கவனியுங்கள்.
சீஷராக்குவது எப்படி நேராக இருக்க வேண்டியதில்லை என்பதைக் காண்க. ஒரே நேரத்தில் பல காரியங்கள் நடக்கலாம்.
காரியங்களைப் பெருக்குவது முக்கியம், விரைவாகப் பெருக்குவது இன்னும் முக்கியமானது. வேகம் ஏன் முக்கியமானது என்று பாருங்கள்.
உங்களுக்குத் தெரிந்த மக்களிடத்தில் இயேசுவைப் பற்றி சொல்வது
உங்கள் உறவுகளை பாதுகாக்க உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு முறை.
மனிதகுலத்தின் ஆரம்பம் முதல் இந்த யுகத்தின் இறுதி வரை கடவுளின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கான வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையை இயேசு எவ்வாறு மாற்றியிருக்கிறார் என்பதைப் பகிர்வதன் மூலம் மூன்று நிமிடங்களில் உங்கள் சாட்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை அறிக.
உங்களுக்குத் தெரியாத மக்களிடம் இயேசுவைப் பற்றி சொல்வது
சமாதானமான நபர் யார், அப்படி ஒருவரைக் நீங்கள் கண்டறிந்ததும் எப்படி அறிந்து கொள்வீர்கள்.
மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான எளிய வழி இது. அது பெயரைப் போலவே இருக்கிறது - சுற்றி நடக்கும்போது கடவுளிடம் ஜெபிப்பது!
இது 3/3 குழுக்களை வழிநடத்தும் மற்றும் தொடங்கும் நபர்களைக் கொண்ட ஒரு குழு. இது 3/3 வடிவமைப்பையும் பின்பற்றுகிறது மற்றும் உங்கள் பகுதியில் கடவுளின் வேலையின் ஆவிக்குறிய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
பெருகும் சீஷர்களை உருவாக்குவதில் உங்கள் சொந்த பெலத்தையும், பாதிப்புகளையும் விரைவாக மதிப்பிடுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த முறை.
ஒரு தலைமைத்துவ செல் என்பது வழிநடத்த அழைக்கப்பட்ட ஒருவர் சேவை செய்வதன் மூலம் தங்கள் தலைமத்துவத்தை வளர்த்துக் கொள்ளும் முறை.
பெருகும் தேவாலயங்கள் எவ்வாறு இணைந்திருக்கின்றன மற்றும் ஒரு பெரிய, ஆவிக்குறிய குடும்பமாக வாழ்க்கையை எவ்வாறு ஒன்றாக வாழ்கின்றனர் என்பதை அறிக.