concept

சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை

இந்தப் பக்கத்தை பகிருங்கள்

கிறிஸ்துவில் நாம் யாராக இருக்கிறோம் மற்றும் கிறிஸ்துவில் மற்றவர்களுடன் நம்மை எவ்வாறு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிய, "சீஷர்" மற்றும் "தேவாலயம்" குறித்து ஒரு எளிய வரையறையை வைத்திருப்பது முக்கியம்.

சீஷன் என்றால் என்ன?

சீஷன் என்ற சொல்லின் பொருள் பின்பற்றுபவர் என்பதாகும். ஒரு சீஷன் என்பவர் கடவுளைப் பின்பற்றுபவர். “வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று இயேசு சொன்னார். ஆகவே கடவுளுடைய இராஜ்யத்தில் இயேசுவே நம்முடைய அரசர். நாம் அவருடைய குடிமக்கள், அவருடைய சித்தத்திற்கு உட்பட்டவர்கள். அவரது ஆசைகள், குறிக்கோள்கள், நோக்கங்கள், முன்னுரிமைகள் மற்றும் மதிப்புகள் மிக உயர்ந்தவை மற்றும் சிறந்தவை. அவருடைய வார்த்தையே பிரமாணம். இராஜ்ஜியத்தின் கட்டளை என்றால் என்ன? இயேசு தம் குடிமக்களிடம் என்ன செய்யச் சொல்கிறார்? பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும், கடவுளின் அனைத்து கற்பனைகளையும், அதாவது அனைத்து சட்டங்களையும், தீர்க்கதரிசிகளையும், இந்த இரண்டு காரியங்களில் சுருக்கிக் கூறலாம்: கடவுளை நேசி, மக்களை நேசி. சீஷர்களை உருவாக்கவும், அவர் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கற்பிக்கவும் இயேசு நமக்குக் கட்டளையிட்டார். சீஷர்களை உருவாக்குவது என்பது, இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களுக்குக் கற்பிப்பதை உள்ளடக்குகிறது என்பதால், புதிய ஏற்பாட்டை இந்த ஒரு விஷயத்தில் சுருக்கிக் கூறலாம்: சீஷர்களை உருவாக்குங்கள். எனவே, இயேசுவைப் பின்பற்றி கடவுளை நேசிக்கும், மக்களை நேசிக்கும் மற்றும் சீஷர்களை உருவாக்கும் ஒருவனே சீஷன்.

தேவாலயம் என்றால் என்ன?

தேவாலயத்தை ஒரு கட்டிடமாக நினைப்பதற்கு நீங்கள் பழகி இருக்கலாம் - நீங்கள் செல்லும் இடம். ஆனால் தேவனுடைய வார்த்தை தேவாலயத்தைப் பற்றி ஒரு குழு அல்லது கூட்டம் என்று சொல்கிறது - நீங்கள் சார்ந்திருக்கும் மக்கள். "தேவாலயம்" என்ற வார்த்தை வேதத்தில் மூன்று வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது:

  • உலகளாவிய திருச்சபை – முன்பு இருந்தவர்கள், இப்பொழுது இருப்பவர்கள் மற்றும் பின்னாளில் இயேசுவைப் பின்பற்றுபவர்கள்
  • நகரம் அல்லது பிராந்திய தேவாலயம் -- உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும், இயேசுவைப் பின்பற்றும் மக்கள்
  • வீட்டில் உள்ள தேவாலயம் -- ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் அல்லது சந்திக்கும் இடத்தில் இருக்கும் இயேசுவைப் பின்பற்றும் மக்கள்

எளிய தேவாலயங்கள், இயேசுவை மையமாகவும் இராஜாவாகவும் கொண்ட ஆவிக்குறிய குடும்பங்கள். அவர்கள் கடவுளை நேசிக்கும், மற்றவர்களை நேசிக்கும் மற்றும் சீஷர்களை உருவாக்கும் ஆவிக்குறிய குடும்பங்கள். இந்த எளிய தேவாலயங்களின் குழுக்கள் ஒன்றிணைந்து பெரியதாக சுவிஷேச பணி செய்யும் போது, ​​அவர்கள் ஒரு நகரம் அல்லது பிராந்திய தேவாலயத்தை உருவாக்குகிறார்கள். உலகளாவிய தேவாலயம் என்பது, பிராந்தியங்ளை ஒன்றிணைத்து, வரலாறு முழுவதும் நீண்டிருக்கும் அனைத்து எளிய தேவாலயங்களால் ஆனது.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  • நீங்கள் ஒரு தேவாலயத்தை பற்றி நினைக்கும் போது, உங்கள்​​ நினைவுக்கு என்ன வருகிறது?
    • அந்த படத்திற்கும், வீடியோவில் 'எளிய தேவாலயம்' என்று விவரிக்கப்பட்டுள்ளதற்கும் என்ன வித்தியாசம்?
    • எதைப் பெருக்குவது எளிதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஏன்?

இன்றே Zúme Training-ஐ தொடங்குங்கள்

இது முற்றிலும் இலவசம்; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்—எங்கு இருந்தாலும், உங்கள் சொந்த வேகத்தில் முன்னேறலாம்.

இலவசமாக பதிவு செய்யுங்கள்