ஜூம் தனியுரிமை கொள்கை
உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் எங்களிடம் மிகவும் பத்திரமாக உள்ளது. அது அமெரிக்க தனியுரிமை கொள்கையின் அடிப்படையில் பாதுகாக்கப் படுகிறது. எங்களுடைய தனியுரிமை கொள்கைகளை பயன்படுத்தி உங்கள் தகவல்களை நாங்கள் எப்படி திரட்டுகிறோம், அதை எப்படி நிர்வகிக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சமூக வலைதளங்களின் நுழைவுகள் எப்படிப்பட்ட கடவுச் சொல்லுக்கு அங்கீகாரம் அளிக்கிறது?
முகனூல் அல்லது கூகுள் உள்நுழைவு பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து கீழே உள்ள சுயவிவர கூறுகள் மாறும்.
- பொது சுய விவரம். இது சில பயனாட்டாளர்களின் அடையாளம், பெயர், புகைப்படம், பாலினம் மற்றும் விலாசத்தைக் கொண்டது.
- மின்னஞ்சல் விலாசம்.
எங்களுடைய இணையதளத்தின் மூலம் எப்படிப்பட்ட விவரங்களை சேகரிக்கிறோம்?
இணையதளத்தின் சரியான செயல்பாட்டிற்காக சில தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன, மேலும் கூடுதல் பயிற்சி மற்றும் ஆதரவிற்காக பிற தகவல்கள் கோரப்பட்டு சேமிக்கப்படும்.
- ஒரு பயனரின் உண்மையான பெயர் அல்லது புனைப்பெயர், தளம் மற்றும் தகவல்தொடர்புகளின் தனிப்பட்ட தரத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் சேவை கோரிக்கைகள் மற்றும் பயிற்சிக்காகவும் கோரப்படுகிறது.
- சரியான தளம் மற்றும் தகவல்தொடர்பு செயல்பாட்டை மேற்கொள்வற்காகவும், பொருத்தமான பயிற்சி மற்றும் ஆதாரங்களுடன் பயனரை இணைக்க எங்களுக்கு உதவுவதற்காகவும் ஒரு பயனரின் மொழி விருப்பம் சேமிக்கப்படுகிறது.
- ஒரு கணக்கை நிறுவ பயனரின் மின்னஞ்சல் முகவரி தேவை மற்றும் தளத்தின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பரிவர்த்தனை தொடர்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இலவச பயிற்சி சேவையை ஆதரிப்பதற்காக பயனரின் தொலைபேசி எண் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.
- தள வளங்கள் மற்றும் தகவல்தொடர்புகளைத் தனிப்பயனாக்கவும், பொருத்தமான பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆதாரங்களுடன் பயனர்களை இணைக்கவும், பயனர் இருக்கும் நகரத்தின் பெயர் கோரப்படுகிறது.
விவரங்களை எப்பொழுது சேகரிக்கிறோம்?
- நுழைவில் விவரங்களை சேகரிக்கிறோம்.
- இந்த பயிற்சியில் உங்கள் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்பதையும் கண்காணிக்கிறோம்.
- பல்வேறு பதிவு மற்றும் கோரிக்கை படிவங்கள் மூலம் தேவையான தகவல்களை நாங்கள் கோருகிறோம்.
உங்களுடைய விவரங்களை எப்படி உபயோகப்படுத்துகிறோம்?
- உங்களுடைய மின்னஞ்சலை பயன்படுத்தி சூம் பயிற்சியில் ஒரு கணக்கு தொடங்குவதற்காக உபயோகப்படுத்துகிறோம்.
- கடவு சொல்லை மாற்றுவதற்கான கோரிக்கை போன்ற மின்னஞ்சல்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
- எங்களுடைய ஊக்குவிப்பையும் உங்கள் முன்னேற்றத்தையும் அனுப்பி வைப்போம்.
உங்களுடைய தகவல்களை எப்படி பாதுகாக்கிறோம்?
இணையத்தில் மட்டுமல்ல எங்களுடைய தகவல் சேமிப்பிலும் உங்கள் விவரங்கள் இணைகுறியாக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய குழுவில் உள்ள மிகச் சிலருக்கு மட்டுமே அதை உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உங்களுடைய விவரங்கள் எங்களுடைய நெட்வொர்க்கில் மிகப்பாதுகாப்பாக இருக்கிறது. அதை அதற்கான அனுமதி பெற்றவர் மாத்திரமே உபயோகப்படுத்துகிறார். நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் மறைகுறியாக்கப்படுள்ளது.
நீங்கள் பதிவு செய்யும் உங்கள் சுய விவரங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் பல ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
“குக்கிகளை” உபயோகப்படுத்திகிறோமா?
குக்கிகளையோ அல்லது மற்ற எந்த முறைகளையோ, எங்கள் அலுவலமோ அல்லது எங்களுடன் தொடர்புடைய வேறு ஒருவரோ உபயோகப்படுத்தினால் அது உங்களுக்கான சேவையை செய்ய மட்டுமே.
தகவலுக்காக உங்கள் அனுகுதல் மற்றும் கட்டுப்பாடு.
எங்கள் "Contact Us" பக்கத்தின் மூலம் எங்களைத் தொடர்புகொண்டு, கீழ்க்கண்டவற்றை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
- உங்களின் காரியத்திலிருந்து எப்படிப்பட்ட விவரங்களை சேகரித்துள்ளோம் என்பதைப் பார்க்கவும்.
- எங்களிடம் இருக்கும் உங்களின் எந்த தகவல்களையும் மாற்றுவதற்கு.
- உங்கள் கணக்கு அல்லது உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள எந்தத் தரவையும் நீக்கச் செய்யுங்கள்.
- உங்கள் தரவை நாங்கள் பயன்படுத்துவதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் அதை எங்களுக்கு தெரிவிக்கவும்.
- எதிர்காலத்தில் எங்களிடமிருந்து விலகுவதற்கு, எங்களை தொடர்பு கொள்ளவும்.
மாறுதல்கள்
எங்களின் தனியுரிமைக் கொள்கைகள் மாறிக் கொண்டேயிருக்கும். அதை இந்த பக்கத்தில் காணலாம்.