tool

SOAPS வேத வாசிப்பு

இந்தப் பக்கத்தை பகிருங்கள்

இயேசுவைப் பின்பற்றுபவராக, நாம் தினமும் வேதத்தை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 25-30 அத்தியாயங்களை வாசிப்பது ஒரு நல்ல வழிகாட்டுதலாகும். SOAPS வேத வாசிப்பு வடிவமைப்பைப் பயன்படுத்தி தினசரி நாட்குறிப்பை எழுதுவது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவும், அதற்கு கீழ்ப்படியவும் மேலும் வேதத்தைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் உதவும். SOAPS என்பதன் சுருக்கம்:

  • வசனம்: இன்று உங்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வசனங்களை எழுதுங்கள்.
  • கவனித்தல்: நன்றாகப் புரிந்துகொள்ள அந்த வசனங்கள் அல்லது முக்கிய குறிப்புகளை உங்கள் சொந்த வார்த்தைகளில் மீண்டும் எழுதவும்.
  • செயல்பாடு: உங்கள் சொந்த வாழ்க்கையில் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
  • ஜெபம்: நீங்கள் கற்றுக் கொண்டதையும், நீங்கள் எவ்வாறு அதற்கு கீழ்ப்படியத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதையும் கடவுளிடம் சொல்லி ஒரு பிரார்த்தனையை எழுதுங்கள்.
  • பகிர்தல்: நீங்கள் கற்றுக்கொண்ட/பயன்படுத்தியதைப் பற்றி யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று கேளுங்கள்.

இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு, வேத வாசிப்பு முறையைக் கற்றுக் கொள்வதற்கும் நினைவில் கொள்வதற்கும் இது ஒரு எளிய வழியாகும்.

SOAPS-ன் பயன்பாட்டிற்கான உதாரணம் இங்கே:

S - "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" என்று கர்த்தர் சொல்லுகிறார். " பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது." ஏசாயா 55:8-9

O – ஒரு மனிதனாக, எனக்குத் தெரிந்தவற்றிலும், எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தவற்றிலும் நான் ஒரு வரம்புக்குட்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் கடவுள் எந்த வகையிலும் வரையறுக்கப்படவில்லை. அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார் மற்றும் அறிவார். அவரால் எதையும் செய்ய முடியும்.

A – கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருப்பதாலும், அவருடைய வழிகள் மிகச் சிறந்தவை என்பதாலும், என்னுடைய சொந்த வழியை சார்ந்திராமல் அவரைப் பின்பற்றினால் வாழ்க்கையில் அதிக வெற்றியைப் பெறுவேன்.

P – ஆண்டவரே, உமக்குப் பிரியமான மற்றும் பிறருக்கு உதவும் ஒரு நல்ல வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் வழிகள் தவறுகளுக்கு வழிவகுக்கும். என் எண்ணங்கள் காயத்திற்கு வழிவகுக்கும். தயவு செய்து உம்முடைய வழிகளையும், உம்முடைய எண்ணங்களையும் எனக்குக் கற்றுக் கொடும். நான் உம்மைப் பின்பற்றும் போது, உமது பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தட்டும்.

S – இந்த வசனங்களையும், இந்த விண்ணப்பத்தையும் எனது நண்பரான ஸ்டீவ் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். அவர் கடினமான காலத்தை எதிர்கொள்கிறார் மற்றும் அவர் எதிர்கொள்ளும் முக்கியமான முடிவுகளுக்கு வழிகாட்டுதல் தேவை.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  • என்னுடைய வேத வாசிப்பு நேரத்தில், கடவுளிடமிருந்து நான் கேட்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு முக்கியம்?
    • இந்த முறையை இப்போது நான் பகிர்வதற்கு, எனது வட்டத்திற்குள் உள்ளவர்கள் யார்?

இன்றே Zúme Training-ஐ தொடங்குங்கள்

இது முற்றிலும் இலவசம்; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்—எங்கு இருந்தாலும், உங்கள் சொந்த வேகத்தில் முன்னேறலாம்.

இலவசமாக பதிவு செய்யுங்கள்