tool

கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்

இந்தப் பக்கத்தை பகிருங்கள்

இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் செய்கைகளுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும், எனவே இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். கணக்கொப்புவித்தலைக் குறித்த பல உவமைகளை இயேசு பகிர்ந்து கொண்டார். மேலும் நாம் என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்பதற்கு நாம் எவ்வாறு பொறுப்பாவோம் என்பதற்கான பல உண்மைகளை நமக்குக் கூறினார். எனவே கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள் என்பது சகோதர, சகோதரிகள் உண்மையிலும், அன்பிலும் ஒன்றாக நடப்பதன் இயல்பான வெளிப்பாடாகும். கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று நபர்களைக் கொண்டவை - ஆண்களுடன் ஆண்கள், பெண்களுடன் பெண்கள். - அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கூடி, காரியங்கள் சரியாக நடக்கும் பகுதிகள் மற்றும் திருத்தங்கள் தேவைப்படும் பகுதிகளை வெளிப்படுத்த உதவும் கேள்விகளின் தொகுப்பைப் பற்றி விவாதிப்பார்கள். நேருக்கு நேர் சந்திக்க முடியாவிட்டால் அவர்கள் தொலைபேசியில் கூட பேசலாம்.

பொறுப்புடைமைக் கேள்விகள் தொகுப்பு 1

  1. இயேசுவைப் போல மாற ஜெபியுங்கள்
  2. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் ஜெப வாழ்க்கை எப்படி உள்ளது?
  3. நீங்கள் அறிக்கையிட வேண்டிய பாவம் ஏதாவது இருக்கிறதா? [உறவுகள், பாவ இச்சை, பணம் சம்பந்தமான, பெருமை, நேர்மை, அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல் போன்றவை]
  4. கடந்த முறை தேவன் சொன்ன காரியத்திற்குக் கீழ்ப்படிந்தீர்களா? விவரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  5. உங்கள் பட்டியலில் உள்ள விசுவாசி 
    அல்லாதவர்களுக்காக இந்த வாரம் ஜெபித்தீர்களா? அவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததா? அப்படியானால் விவரம் சொல்லவும்.
  6. இந்த வாரம் ஒரு புதிய வசனத்தை மனப்பாடம் செய்தீர்களா? ஆம் எனில் அதைச் சொல்லவும்
  7. இந்த வாரம் வேதத்திலிருந்து குறைந்தது 25 அதிகாரங்கள் படித்தீர்களா?
  8. தேவன், வேதத்தின் மூலம் உங்களுடன் என்ன பேசினார்?
  9. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
  10. இந்த வாரம் 3/3 குழுவுடன் சந்தித்தீர்களா? எப்படி இருந்தது?
  11. 3/3 குழுவைத் தொடங்குவதற்கு இந்த வாரம் யாருக்காவது உதவி செய்தீர்களா? அப்படியானால் விவரம் சொல்லவும்.
  12. கிறிஸ்துவுடனான உங்கள் நடைக்கு ஏதாவது தடையாக இருக்கிறதா?
  13. சுவிசேஷத்தைச் சொல்வதற்கு இந்த வாரம் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? அப்படியானால் விவரம் சொல்லவும்.
  14. 1-3 நிமிடத்திற்கு சாட்சி மற்றும் சுவிசேஷம் சொல்வதைப் பயிற்சி செய்யவும்
  15. அடுத்த வாரம் உங்கள் குழுவிற்கு யாரை அழைக்கப் போகிறீர்கள்? 4 பேருக்கு மேல் இருந்தால் அதைப் பெருகச் செய்யவும்.
  16. நீங்கள் பகிர்ந்து கொண்டதைக் குறித்து ஜெபித்து முடிக்கவும்.

பொறுப்புடைமைக் கேள்விகள் தொகுப்பு 2

  1. கடந்த வாரம் கற்றுக் கொண்டதிலிருந்து உங்கள் சிந்தனையும் வாழ்க்கையும் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது?
  2. கடந்த வாரத்தில் கற்றுக் கொண்டதை யாருக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். அதை அவர்கள் எவ்வாறு பெற்றுக் கொண்டனர்?
  3. கடவுள் எப்படி உங்களில் வேலை செய்கிறார்?
  4. உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம், கிறிஸ்துவின் மகத்துவத்திற்காய் யாருக்கு சாட்சியாக இருந்தீர்கள்?
  5. நீங்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களைப் பார்ப்பதற்குத் தூண்டப்பட்டீர்களா அல்லது உங்கள் மனதை அதற்கு அனுமதித்தீர்களா?
  6. உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்துவதில் கடவுளுடைய உரிமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா?
  7. நீங்கள் எதையேனும் இச்சித்தீர்களா?
  8. உங்கள் வார்த்தைகளால் ஒருவரின் நற்பெயரை அல்லது உணர்ச்சிகளை நீங்கள் காயப்படுத்தியிருக்கிறீர்களா?
  9. உங்கள் வார்த்தை அல்லது நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட அல்லது நேர்மையற்றதாக இருந்ததா?
  10. நீங்கள் அடிமைத்தனமான [சோம்பேறி அல்லது ஒழுக்கமற்ற] நடத்தையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?
  11. நீங்கள் ஆடை, நண்பர்கள், வேலை, அல்லது உடைமைகளுக்கு அடிமையாக இருக்கிறீர்களா?
  12. நீங்கள் யாரையாவது மன்னிக்கத் தவறிவிட்டீர்களா?
  13. எப்படிப்பட்ட கவலைகள் அல்லது வருத்தங்களை எதிர்கொள்கிறீர்கள்? நீங்கள் புகார் சொல்லிக் கொண்டோ அல்லது முணுமுணுத்துக் கொண்டோ இருக்கிறீர்களா?
  14. நன்றியுள்ள இருதயத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?
  15. உங்கள் முக்கிய உறவுகளில் கௌரவம், புரிதல், மற்றும் தாராளம் இருக்கிறதா?
  16. சிந்தனை, வார்த்தை அல்லது செயலில் என்ன சோதனைகளை எதிர்கொள்கிறீர்கள், நீங்கள் அதற்கு எவ்வாறு பதிலளித்தீர்கள்?
  17. மற்றவர்களுக்கு, குறிப்பாக விசுவாசிகளுக்கு ஆசீர்வதிக்க அல்லது ஆசீர்வதிப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
  18. பிரார்த்தனைக்கு நீங்கள் குறிப்பிட்ட பதிலைக் கண்டிருக்கிறீர்களா?
  19.  இந்த வார வாசிப்பு முடிந்ததா?

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  • நான் யாரை தவறாமல் சந்தித்து இந்த பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கலாம்? உங்களுக்கு ஒரு பெயரைக் காண்பிக்க, கடவுளிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள்.
    • உங்களின் தனிப்பட்ட புனிதத்தன்மையுடனான இத்தகைய நோக்கத்திலிருந்து உங்களைத் தடுப்பது எது?

இன்றே Zúme Training-ஐ தொடங்குங்கள்

இது முற்றிலும் இலவசம்; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்—எங்கு இருந்தாலும், உங்கள் சொந்த வேகத்தில் முன்னேறலாம்.

இலவசமாக பதிவு செய்யுங்கள்