concept

பெருகுவதன் வேகம் முக்கியமானது

இந்தப் பக்கத்தை பகிருங்கள்

வேகம் முக்கியமானது, ஏனென்றால்  நமது "வாழ்க்கை" குறுகியது மற்றும் விரைவில் நமது நித்தியம் தீர்மானிக்கப்படுகிறது. கடவுள் நம்முடன் பொறுமையாக இருக்கிறார் என்று கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது - யாரும் அழிந்து போவதை அவர் விரும்பவில்லை, ஆனால் எல்லோரும் அவரைத் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கடவுள் நமக்கு அதிக நேரத்தைக் கொடுத்திருக்கிறார், ஏனென்றால் அவர், நாம் இவைகளை செய்ய வேண்டும் என்பதற்காய் அழைக்கப்பட்ட அனைத்தையும் செய்வதற்கும், அடைய வேண்டும் என்பதற்காய் அழைக்கப்பட்ட அனைத்தையும் அடைவதற்கும் நமக்கு ஒரு குறுகிய காலம் மட்டுமே உள்ளது என்பதை அறிவார். இயேசுவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்ற, அவருடைய மக்களை  நாம் விரைவாகப் பின்தொடர வேண்டும். நாம் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள முடியாது. நாம் நமது வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

தேவாலயங்கள் பெரியதாக இருந்தாலும், முன்பை விட உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் அதிக விகிதமாக இருந்தாலும், மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை நாம் இன்னும் அதிகமாக பின்பற்றத் தவறி வருகிறோம். முன்னெப்போதையும் விட இப்பொழுது இரட்சிக்கப்படாதவர்கள் அதிகம் என்ற நிலை உள்ளது. இந்த நிலை ஏற்புடையதல்ல. பெருகச் செய்யும் சீஷர்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்பதற்கு இதுவும் ஒரு காரணம். அடிப்படையில் உண்மையில் பெருகச் செய்யும் சீஷர்களின் சதவீதம் மிகவும் முக்கியமானது.

இதை விளக்குவதற்கு, பத்து வருட காலத்தின் உதாரணத்தைப் பார்ப்போம். ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை ஒரு புதிய சீஷரை உருவாக்கும் ஒரு சீஷருடன் நீங்கள் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். புதிய சீஷர்களும் அவ்வாறே செய்கிறார்கள். பத்து வருடங்களில் உங்களுக்கு 64 சீஷர்கள் இருப்பார்கள். 

அதற்கு பதிலாக, ஒவ்வொரு சீஷனும், புதிய சீஷர்களும், ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை புதிய சீஷர்களை சேர்த்தால், பத்து ஆண்டுகளில் உங்களுக்கு பில்லியன் சீஷர்கள் இருப்பார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பத்து வருட காலத்தில், சராசரி பெருக்கத்தின் விகிதத்தை 18 மாதங்களில் இருந்து 4 மாதங்களுக்கு மாற்றினால், விளைவு நான்கரை மடங்கு அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல. ஆனால் இது 15 மில்லியன் மடங்கு வேகமானது.

ஒரு புதிய சீஷர் செய்ய வேண்டிய முதல் காரியம், அவர் அல்லது அவள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் இது சாத்தியமாகும். அதாவது அவர்கள் விசுவாசத்திற்கு வந்தவுடன் வேறொருவரை கிறிஸ்துவிடம் வழிநடத்த வேண்டும். சீஷர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இரட்டைப் பொறுப்புணர்வைக் கொண்டிருந்தால், இதன் செயல்முறை முதிர்ச்சி அடையும் வரை தொடர முடியும்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  • வேகம் ஏன் முக்கியமானது?
    • கடவுளுடைய வேகம் மற்றும் முன்னுரிமைகளுடன் உங்களுடையதை இணப்பதற்கு, நீங்கள் உங்கள் சிந்தனை, உங்கள் செயல்கள் அல்லது உங்கள் அணுகுமுறையில் எவைகளை மாற்ற வேண்டும்?
    • மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த வாரம் முதல் நீங்கள் என்ன செய்ய முடியும்?

இன்றே Zúme Training-ஐ தொடங்குங்கள்

இது முற்றிலும் இலவசம்; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்—எங்கு இருந்தாலும், உங்கள் சொந்த வேகத்தில் முன்னேறலாம்.

இலவசமாக பதிவு செய்யுங்கள்