அமர்வு 1
சரிபார்
(1 min)
பங்கேற்ற அனைவரும் சரிபார்த்து விட்டார்களா.
Or six.zume.training/checkin and use code: 5678
ஜெபி
(5 min)
ஜெபத்துடன் ஆரம்பிக்கவும். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், ஆவிக்குறிய காரியங்களை புரிந்து கொள்வதும், நாம் மாறுவதும் இயலாத காரியம். உங்களை வழி நடத்துவதற்காய் குழுவாய் இணைந்து அவரை அழையுங்கள்.
மேலோட்டம்
(1 min)
இந்த அமர்வில், இந்தக் காரியங்களைக் குறித்து நாம் கேட்டு கற்றுக் கொள்வோம்:
இந்த முறைகளை நம்முடைய தொகுப்பில் சேர்ப்போம்:
- கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
- சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
- ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
- SOAPS வேத வாசிப்பு
- கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
READ
(5 min)
கடவுள் சாதாரண மக்களை பயன்படுத்துகிறார்
ஜூமே பயிற்சிக்கு வரவேற்கிறோம். கிரேக்க மொழில ஜுமேனா நுரைமம் 'புளிக்கவைக்கும் பொருள்'
இயேசு சொல்றாரு, ஒரு பெண் சிறிய அளவு ஜூமேயை எடுத்து பெரிய அளவு மாவுல போடறது தான் தேவனின் ராஜ்ஜியம்.
அந்த கலவையை பெண் புளிக்கவைக்க செயல்படும்போது, மாவெல்லாம் புளிக்கற அளவுக்கு பரவச்செய்யகிறாள்.
சாதாரண மனிதன் சிறியதாக எதையாவது செயல்படுத்தி பெரிய அளவுல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்னு இயேசு வெளிப்படுத்தராறு.
இயேசு சொன்னதை செயல்படுத்தறது தான் நம்ம கனவு - தேவனின் ராஜ்ஜியத்துல பெரிய தாக்கத்தை ஏற்படுத்த சிறய கருவிகளை உலகம் முழுக்க பயன்படுத்தசாதாரண மக்களுக்கு உதவணும்.
இயேசுவின் இறுதி அறிவுறுத்தல்கள் அவருடைய சீஷர்களுக்கு சாதாரணமா இருந்துது. அவர் கூறினாறு - பரலோக பூமியின் அதிகாரம் எல்லாமே எனக்கு குடுக்கப்பட்டிருக்கு. அதனால - எல்லா நாடுகளுக்கு போய் சீஷர்களாக்குங்க பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்வீர். என் கட்டளைக்கு கீழ்படியகற்றுக்குடுங்க. நான் உங்க கூட எப்பவும் இருப்பேன் - இறுதி வரைக்கும் இருப்பேன்.
இயேசுவின் கட்டளை சாதாரணமானது - சீஷர்களை உருவாக்குங்க
எப்படி செயல்படுவதுங்கற அவருடைய அறிவுரைகள் ரொம்ப சுலபம்
- எங்கெல்லாம் போறீங்களோ சீஷர்களை உருவாக்குங்க
- பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்வீர். அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்படிய சீஷர்களுக்கு கற்றுக்குடுங்க
சீஷரை உருவாக்க என்ன வழிகள் எல்லாம் இருக்கு?
- எப்பவும் சீஷர்களை உருவாக்கறோம் - எங்க எல்லாம் போறோமோ போகும் இடமெல்லாம்.
- இயேசுவை பின்பற்ற ஒருவர் முடிவெடுக்கும்போது - அவர் ஞானஸ்நானம் செய்யப்படனும்.
- அது வளரும்போது - இயேசுயின் கட்டளை அனைத்துக்கும் கீழ்படிய ஒவ்வொரு சீஷருக்கும் சொல்லிக்குடுக்கணும்.
சீஷர்களை உருவாக்கறது அவருடைய கட்டளைகள்ல ஒண்ணா இருக்கறதுனால, இயேசுவை பின்பற்ற சீஷர்களை உருவாக்கறது எப்படின்னு ஒவ்வொரு சீஷரும் தெரிஞ்சுக்கணும்.
அந்த சீஷர்கள் மற்றவர்களை சீஷராக்கணும். அப்புறம் அந்த சீஷர்கள் மேலும் சீஷர்களை உருவாக்கணும். மேலும்.
சீஷர்களைபன்மடங்காக்கணும். இப்படி தான் ஜூமே செயல்படுத்து.
இது புளிப்பு மாதிரி - மாவெல்லாம் புளிக்கற வரைக்கும் எல்லா மாவுகள்லையும் செயல்படறமாதிரி.
இயேசுசீஷர்களை உருவாக்கவே இந்த கட்டளையை குடுத்தாரு அவர் வாக்கும் குடுத்தாரு.
இயேசு கூறினாறு - உன்னுடன் எப்போதும் இருப்பேன். வாழ் நாள் முடியும் வரை இருப்பேன்.
இயேசு வாக்கின்படி எப்பவும் நம்முடன் இருக்காருன்னு ஒவ்வொரு சீஷசரும் விசுவாசிக்கணும். ஏன்னா அவர் இருக்காரு!
நாம ஒவ்வொருவரும் சீஷரை உருவாக்கணும்னுஇ யேசுவிரும்பறதைஎல்லாரும்ஒப்புக்குடுக்கணும். ஏன்னா அவர் இருக்காரு.
இயேசு கூறினாறு - அவர் கூறினாறு - பரலோக பூமியின் அதிகாரம் எல்லாமே எனக்கு குடுக்கப்பட்டிருக்கு.அதனால - எல்லா நாடுகளுக்கும் போய் சீஷர்களாக்குங்கள்.
இயேசு நம்பும் அந்த அதிகாரத்தை நமக்கு அனுப்பும்போது - அது அவருடைய அதிகாரம்.
அதைவிட மேலான அதிகாரம் எதுவும் இல்லைன்னு இயேசு கூறுகிறார்.
எந்த பாரம்பரியத்துக்கும் மேலான அதிகாரம் இல்லை. எந்த கலாச்சாரத்துக்கும் மேலான அதிகாரம் இல்லை. எந்த சட்டத்துக்கும் மேலான அதிகாரம் இல்லை.
இயேசு கூறினார் - போய் சீஷர்களை உருவாக்குங்கள்.
ஜூமே மாதிரி - புளிப்பு மாதிரி - எல்லா வேலையும் முடியறவரைக்கும் செயல்பட்டுகிட்டே வளர்ந்துகிட்டே இருப்போம்.
விவாதி
(10 min)
- சீஷ்ராக்கும் படி இயேசு எல்லோருக்கும் கட்டளை கொடுத்திருக்கும் பொழுது ஏன் சிலர் மட்டும் அதை செய்கிறார்கள்?
READ
(5 min)
சீஷர்களும் சபையும்
ஜுமே பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த செஷன்ல, சீஷர்களைபத்தியும் சர்ச்சை பத்தியும் பேசுவோம்.
சீஷர்னா என்ன? எப்படி ஒரு சீஷரை உருவாக்கறீங்க?
இயேசுவை பின்பற்றுபவருக்கு அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்படிய எப்படி சொல்லிக்குடுக்கறீங்க? உலகத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவங்களை எப்படி நம்ம வழிக்கு கொண்டு வந்து அவங்களை தேவனின் ராஜ்ஜியத்துக்கு மாத்தனும்?
சீ ஷர் வார்த்தைக்கு பின்பற்றுபவர்னு அர்த்தம். அப்படீன்னா தேவனை பின்பற்றுபவரே சீஷன். இயேசு கூறினார்- பரலோக பூமியின் அதிகாரம் அனைத்தும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால தேவனின் ராஜ்ஜியத்துல, இயேசு நம்முடைய ராஜா. நாம்அவருடைய மக்கள், நம்மை விரும்புபவர். அவருடைய விருப்பங்கள், நோக்கங்கள், எண்ணங்கள், முதன்மைகள் மதிப்புகள் எல்லாமே உயர்ந்தது சிறந்தது. அவர் வசனமே சட்டம். அப்ப ராஜ்ஜியத்தின் சட்டம்னா என்ன? அவருடைய மக்களுக்கு இயேசு என்ன சொல்றாரு?
இயேசு சொல்றாரு -முழு மனதோட கர்த்தர் தேவனை நேசியுங்க, ஆத்துமா முழுக்க, மனம் நிறைய உங்க வல்லமையோட. இயேசு சொல்றாரு -உங்களை போலவே அண்டைவீட்டாரையும் நேசியுங்க. இயேசு கூறுகிறார்பழைய வேதாகமத்தில் உள்ள தேவனின் கட்டளைகளில்- எல்லா சட்டமும் தீர்க்கதரிசனமும் - ரெண்டு விஷயங்களாக உருவகப்படுத்தலாம் - தேவனை நேசியுங்கள் மக்களை நேசியுங்கள். இயேசு கூறினார் -சீஷர்களை உருவாக்குங்கள். இயேசு கூறினார் -நான் கட்டளையிட்ட அனைத்தையும் சொல்லிக்குடுங்கள்.
இயேசுவின் கட்டளைகள் அனைத்தையும் சொல்லிக்குடுத்து சீஷர்களை உருவாக்குவதால் - புதிய வேதாகமம் ஒரே விதமாக உருவகப்படுத்தலாம் - சீஷர்களை உருவாக்குங்கள்.
இயேசுவை பின்பற்றுபவர் தேவனை மக்களை நேசிப்பவர் சீஷர்களை உருவாக்குபவரே சீஷர் ஆவார்.
அப்ப சர்ச்னா என்ன?
சர்ச்சை நீங்க ஒரு கட்டிடமா நினைக்கலாம் - நீங்க போகற இடமா நினைக்கலாம்.
ஆனா சர்ச் ஒரு கூடமா தேவனின் வசனம் கூருது - அது உங்க இடம்.
- சர்ச் வார்த்தை பைபிள்ல மூணு விதமா பயன்படுத்தப்பட்டிருக்கு - - உலகளாவிய சர்ச் -எல்லா மக்களுமே இயேசுவை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள்.
- நகரமோ அல்லது மாநில சர்ச்சோ - இயேசுவை பின்பற்றி உலகம் முழுவதும் இருக்கும் மக்கள்.
- இல்லத்தில் சர்ச் - இயேசுவை பின்பற்றும் எல்லா மக்களும் ஒன்றுக்கும் மேலாக இருக்கும் இடத்தில் சந்திப்பவர்கள்.
ஆண்மீக குடும்பம் - இயேசுவை பின்பற்றுபவர்கள், தேவனை, மக்களை நேசிப்பார்கள் சீஷர்களை உருவாக்கி உள்ளுரில் சந்தித்து இந்த மாதிரி சர்ச்சை உருவாக்குகிறார்கள் -இல்லத்தில் சர்ச் அல்லது சாதாரண சர்ச்.
இந்த சாதாரண சர்ச்சுகளின் குழுக்கள் மிக பெரிய விஷயங்களை செய்ய இணைகிறார்கள், ஒன்றாக, அவர்களால் நகரத்தையோ மாநில சர்ச்சையோ உருவாக்கமுடியும்.
இந்த எல்லா சாதாரண சர்ச்சுகளும் பகுதிகளாக பின்னப்பட்டு வரலாறு காணாத உலகளாவிய சர்ச்சா இருக்கு.
அது தான் சர்ச் பெரிய எழுத்து சியுடன்
இயேசு அவர்களின் மையமாகவும் ராஜாவாகவும் ஆண்மிக குடும்பங்களின் சாதாரண சர்ச்சுகளா இருக்கு. சாதாரண சர்ச்சுகள் ஆண்மீக குடும்பங்களா தேவனை மற்றவர்களை நேசிக்கிறார்கள் சீஷர்களை உருவாக்கி பன்மடங்காக்குகிறார்கள். சில சர்ச்சுகள்ல கட்டங்கள் நிகழ்ச்சிகள் பொருளாதாரம் பணியாளர்களோட இருக்கு. தேவனை மற்றவர்களை நேசிக்கவும் சீஷர்களை பன்மடங்காக்கவும் இதெல்லாம் சாதாரண சர்ச்சுகளுக்கு தேவை இல்லை. கூடுதலானது எதுவும்சர்ச்சை சிக்கலாகவும் பன்மடங்காக்க கடினமாகறதுனால, நம்ம பயிற்சிகள் கட்டிடங்கள் நிகழ்ச்சிகள் பொருளாதாரம் பணியாளர்கள் நகரத்தில பகுதி சர்ச் பன்மடங்கு சாதாரண சர்ச்சுகள்ல இருந்து உருவாகுது.
நினைவிருக்கட்டும் ஜுமேன்னா 'புளிப்புமாவு' - ஒரு சாதாரண, ஒற்றை செல் உயிரினம் உடனே உற்பத்தி பெருக்குகிறது.
ஜுமே பயிற்சியால் - புளிப்புமாவு போல இருப்போம் - சாதாரணமாக பன்மடங்காக இருப்போம். ஆனா பன்மடன்காக்கறதுக்கு முன்னால - தேவனை எதை மறுஉற்பத்தி செய்ய விரும்பறாருனு உருதிபடுத்திக்கலாம். காரணம் பன்மடங்கு நல்லதாகும் - ஆனா எப்பவும் இல்லை. புற்றுநோய் பன்மடங்கானது. அது உயிர்கொல்லி. அதனால எப்படி சாவைதவிர்த்துஉயிரைஇனப்பெருக்கம் செய்யறோம்? இனப்பெருக்கத்துக்கு தகுதி உள்ள சீஷர்கள்னு நம்மளை எப்படி உறுதிபடுத்திக்கறோம்?
விவாதி
(10 min)
- ஆலயத்தைக் குறித்து நினைக்கும் போது உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
- எளிய சபை என்பதைக் குறித்து அந்த வீடியோவில் சொல்லப்பட்டதற்கும் அந்தப் படத்தில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- பெருகுவதற்கு எது எளிதானது? ஏன்?
READ
(5 min)
கேட்டல் மற்றும் கீழ்படிதல்
ஜூமே பயிற்சிக்கு வரவேற்கிறோம். இந்த செஷன்ல, தேவனிடம் கேட்டதையும், அதுக்கு கீழ்படியறதை பத்தியும் பேசறோம்.
சுவாசிப்பதே ஜீவிதம். நாம உள்ள சுவாசிக்கறோம். வெளில சுவாசிக்கறோம். ஜீவிதம்.
தேவனின் ராஜ்ஜியத்துல சுவாசிப்பது அவ்வளவு முக்கியம். தேவன் அவருடைய ஆவியை 'சுவாசம்னு சொல்றாரு.
ராஜ்ஜியத்துல, நாம தேவன் சொல்றதை கேக்கும்போது உள்ள சுவாசிக்கறோம். தேவனை அவர் வசனத்தின் மூலம்கேக்கும்போது சுவாசிக்கறோம் - பைபில். தேவனை அவர் ஜெபத்தின் மூலம் கேக்கும்போது சுவாசிக்கறோம் - அவரோட பேசறோம். தேவனை அவர் தேகத்தின் மூலம் கேக்கும்போது சுவாசிக்கறோம் - சர்ச், இயேசுவின் மற்ற பின்பற்றுபவர்கள். தேவனை அவர் செயல்களின் மூலம் கேக்கும்போது சுவாசிக்கறோம் - நிகழ்வுகள், அனுபவங்கள் சில நேரங்கள்ல துன்புறுத்தல்கள் பாதிப்புகள் தன்னுடை பிள்ளைகளுக்குஅனுமதிக்கராறு.
தேவனிடமிருந்து நாம கேட்டு செயல்படும்போது ராஜ்ஜியத்திலிருந்து நாம வெளில சுவாசிக்கறோம். நாம கீழ்படியும்போது வெளிப்புறமா சுவாசிக்கறோம்.
சில நேரங்கள்ல வெளிப்புறம் சுவாசிச்சு கீழ்படியறதுன்னா நம்ம எண்ணங்களை, வசனங்களை நம்ம செயல்கள் இயேசுவின் சீரமைப்புடன் விருப்பத்துடன் மாறுதுனு அர்த்தம்.
சிலநேரங்கள்ல கீழ்படிய சுவாசிக்கறதுன்னா இயேசு நம்ம கூட பகிர்ந்துகிட்டதை பகிர்ந்துக்கறோம் - அவர் குடுத்ததை மத்தவங்களுக்கு குடுக்கறோம் - அதனால தேவன் நம்மளை ஆசிர்வதிக்கறதை மத்தவங்களும் ஆசிர்வதிக்கப்படலாம்.
இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு - இந்த உள் சுவாசிப்பு வெளி சுவாசிப்பு நெருக்கடியானது. இது தான் நம்ம ஜீவிதம். இயேசு கூறுகிறார் - குமாரன் தானாகவே எதுவும் செய்ய முடியாது. பிதா செய்வதை பார்ப்பதை மட்டும் தான் செய்வார். எதை எல்லாம் பிதா செய்கிறாரோ, குமாரனும் செய்கிறார்.
இயேசு கூறுகிறார் - என் அதிகாரத்தினால் மட்டுமே பேசல. என்னை அனுப்பிய பிதா எதை எப்படி சொல்லணும்னு கட்டளையிட்டிருக்கிறார்.
இயேசு கூறுகிறார் அவர் சொன்ன ஒவ்வொரு வசனமும் நிறைவேற்றப்பட்ட செயலும் தேவனிடம் கேட்டு கீழ்படிதலின் அடிப்படைல இருந்துது.
உள் சுவாசிப்பு - தேவனிடமிருந்து கேட்பது. வெளியில் சுவாசிப்பது - கேட்டதை கீழ்படிந்து மத்தவங்களோட பகிர்ந்துக்கறது.
இயேசுவை பின்பற்றுபவர்கள் அவருடைய பரிசுத்த ஆவியினால். தேவனிடமிருந்தும் கேட்பார்கள்னு கூறினாறு - அவருடைய சுவாசம் - அவரை பின்பற்றும் நம் ஒவ்வொருவருக்குள் சுவாசிக்கும்.
உள் சுவாசிப்பு - தேவனிடமிருந்து கேளுங்கள். வெளி சுவாசிப்பு - கேட்டதை கீழ்படிந்து மத்தவங்களோட பகிர்ந்துக்குங்க.
எப்படிஜீவிக்கறதுன்னு இயேசு கான்பித்தாரு.
தேவனின் குரலை எப்படி நாம கேக்கறோம் ? எதைகீழ்படியறதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
இயேசு தன்னையே 'நல்ல மேய்ப்பாளன்னு சொல்லிக்கிட்டாரு. இயேசுவை பின்பற்றுபவர்களை தன்னுடைய ஆடு என்று அழைத்தார். இயேசு கூறினார் - என் ஆடு என் குரலை கேட்கிறது, அவர்களை எனக்கு தெரியும், என்னை பின்பற்றுகிறார்கள். இயேசு கூறினார் - தேவனை சார்ந்தவர்களால் தேவனின் குரலை கேட்கமுடியும். உங்களுக்கு கேக்காததுக்கு காரணம் நீங்க தேவனை சார்ந்தவர் இல்லை.
இயேசுவை பின்பற்றுபவர்களாக, அவருடைய குரலை கேட்க நாம ஒப்புக்குடுக்கணும்.
- அமைதியா இருந்து அவர் குரலை கேக்கறோம்.
- இயேசுவை கவனிக்கறதுனால அவருடைய குரலை கேக்கறோம்.
- நம்முடைய எண்ணங்கள்ல நம்முடைய தொலைநோக்கு பார்வைகள்ல, நம் உணர்வுகள்ல அவருடைய குரலை கேக்கறோம்.
- நாம கேள்விப்பட்டதை எழுதும்போதும் டெஸ்ட் பண்ணும்போதும் அவருடைய குரலை கேக்கறோம்.
ஒவ்வொரு குரலோ, இல்லை ஒவ்வொரு எண்ணமோ, இல்லை ஒவ்வொரு தொலைநோக்கோ உணர்வுகளோ தேவனின் குரல் கிடையாது. சில நேரங்கள்ல அது விரோதியின் குரல். நம்முடைய எதிரி பொய் சொல்றவன் பொய்களின் பிதானு இயேசு கூறி இருக்காரு. நம் விரோதி நம்மிடம் திருடவும், கொலை செய்யவும் அழிக்கவும் வருகிறான்.
ஆனாதேவன் சொல்றாரு நாம அவன் குரலை கேக்கறோம் அவன் தான் பேசறான்னு நமக்கு தெரியும். பயிற்சியினாலும் ஜெபத்தினாலும், தேவனின் குரல் நமக்கு நல்லா புரியும். தேவன் குரலா இல்லை வேற குரலானு கேக்கும்போது தெரிஞ்சுக்கலாம்.
நாம கேக்கறதை சோதிக்க இதோ சில வழிகள்:
- இயேசு பேசும்போது - அவருடைய குரல் அவருடைய வசனத்தின்படிசீரா இருக்கும் - பைபிலின்படி - ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கு. அவருடை எழுத்தின் குரலும் பேசும் குரலும் மாறுப்படாது.
- இயேசு பேசும்போது - அவருடைய குரல் நமக்கு நம்பிக்கையும் அமைதியும் தரும். அவருடைய குரல் நம்மளை கண்டிக்காது ஊக்கப்படுத்தாம இருக்காது. இயேசு கண்டிக்கறதில்லை. இயேசு அன்பால திருத்தறாரு.
- இயேசுவின் குரல் தேகத்தின் செயல்களை வெளிப்படுத்தாது - இகழாது இழுவுப்படுத்தாது, தீயொழுக்கம், பில்லி ஸூநியம், வெறுப்புகூறுவது, பொறாமை ஆவேசம், சுயநலம்லட்சியம், மாறுப்பாடு, பிரிவு, குடிபோதை , இதெல்லாம் தேவனின் குரல்ல இருக்காது.
- இயேசு பேசும்போது - தேவனின் ஆவியின் பலனை குரல் வெளிப்படுத்தும் - அன்பு மகிழ்ச்சி, அமைதி பொறுமை, கருணை நன்மை, விசுவாசம், பணிவு சுயக்கட்டுப்பாடு.
- இயேசு பேசும்போது - சந்தேகப்படாம நம்பிக்கையை அவர் குரல் குடுக்கும்.தேவனின் குரலை தான் கேக்கறோம்னு நமக்குள்ள. அமைதியையும் அறிவையையும் உணர்வோம். ஒரே நேரத்துல எல்லாமே கேக்காம இருக்கலாம். நமக்கு தேவைப்பட்டதை மட்டும் பகுதியாகேக்கலாம். ஆனா நாம கேக்கறது உறுதியா இருக்கும் - தடுமாற்றம் ஏற்படாது.
இயேசுவின் ஒவ்வொரு சீஷர்களுக்கும் நல்ல செய்திகள் என்னன்னா நாம உள்ள சுவாசிச்சி தேவன் சொல்றதை கேக்கும்போதும் வெளிப்புறமா சுவாசிச்சு கீழ்படிந்து மத்தவங்களோட பகிர்ந்துக்கும்போது தேவன் இன்னும் தெளிவா பேசுவாரு.
அவருடைய சுவாசம் மேலும் அதிகமா சுவாசிக்கப்படும்.
அவருடைய குரலை மேலும் தெளிவா கேப்போம். வருடைய குரல் தெரியும் மத்தவங்கள்து இல்லை. அவருடைய செயலை உலகத்துல பாப்போம் அவருடைய செயல்ல இணையமுடியும்.
நாம உள்ள சுவாசிக்கறோம். வெளிப்புறம் சுவாசிக்கறோம். ஜீவிதம்.
விவாதி
(10 min)
- தேவனுடைய சத்தத்தை கேட்டு உணர்வது நமக்கு ஏன் அவசியம்?
- தேவனுடைய சத்தத்தை கேட்டு அதற்கு மறுமொழி கொடுப்பது சுவாசிப்பது போன்றதா? ஏன்? அல்லது ஏன் இல்லை?
READ
(5 min)
S. O. A. P. S வேத வாசிப்பு
இயேசு கூறினார் - - எல்லா தேசங்களிலும் சீஷர்களை உருவாக்குங்கள், பிதாகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்வீர். நான் இட்ட என் கட்டளைக்கு கீழ்படிய கற்றுக்குடுங்கள்.
இயேசுவின் கட்டளைப்படி இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் கீழ்படிய விரும்பினால் இயேசுவின் கட்டளைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
தேவன் சொல்ல இருக்கும் சிறந்த கட்டளை சிறந்த நியமனம் சுருக்கமாகும், தேவன் உருவாக்கியபடி விசுவாசி முழு மனதோடு வளர்ந்தால், மேலும் தெரிந்துக்கொண்டு கீழ்படித்தல் அவசியமாகும்.
தொடர்கள் என்றால்:
- இலக்கியம்
- கவனிப்பு
- கடைப்பிடித்தல்
- ஜெபம் மற்றும்
- பகிர்தல்
பயனுள்ள பைபில் பாடத்தை கற்றுக்கொண்டு நினைவுபடுத்தினால் எந்த இயேசுவின் விசுவாசியாலும் பயன்படுத்தமுடியும். ஒவ்வொரு செஷனையும் கூர்ந்து கவனிப்போம்.
நீங்கள் பைபிலை படிக்கும்போதோ கேட்கும்போதோ:
- இலக்கியம்: முக்கியமாக உங்களுக்கு அர்த்தமுள்ள ஓரிரு வசனங்களை இன்றே எழுதவும்.
- கவனித்தல்: அர்த்தத்தை சரியாக புரிந்துக்கொள்ள உங்கள் வார்த்தைகளிலேயே அந்த வசனங்களின் முக்கிய குறிப்புகளை இலக்கியங்களிலிருந்து திரும்ப எழுதவும்.
- கடைப்பிடித்தல்: உங்களுடைய ஜீவிதத்தில் இந்த கட்டளைகளுக்கு கருத்துக்களுக்கு கீழ்படிவதின் அர்த்தத்தை யோசியுங்கள். நீங்கள். என்ன செய்ய வேண்டும் ? வித்யாசமாக என்ன செய்ய வேண்டும் ? இதை எழுதிக்கொள்ளவும்.
- ஜெபம்: தேவனின் வசனத்தில் என்ன படித்தீர்கள் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியும்படி என்ன புரிந்துக்கொண்டீர்கள் அதன்படி செயல்படுத்த ஜெபத்தை எழுதவும்.
- பகிர்தல்: நீங்கள் கற்றுக்கொண்டு கடைப்பிப்பதை யாருடன் பகிர்ந்துக்கொள்வது என்று தேவனிடம் கேளுங்கள்.
இப்படித்தான் தொடரை செயல்படுத்தவேண்டும்:
- இலக்கியம் - பைபில் கூருது -என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல:உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது." ஏசாயா55 : 8-9
- கவனித்தல் - ஒரு மனிதனாக, எனக்கு தெரிந்ததும் எப்படி செயல்படுத்துவதும் குறுகிய அளவே. தேவன் எந்த விதத்திலும் குறுகியவர் அல்ல. அவர் எல்லாவற்றையும் பார்த்து புரிந்துக்கொள்கிறார். அவரால எதையும் செய்ய முடியும்.
- கடைப்பிடித்தல் - தேவனுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அவருடைய வழிகள் சிறந்தது என்பதினால், நான் செயல்படுவதைவிட அவரை பின்பற்றுவதினால் எனக்கு வெற்றி அதிகம் கிடைக்கும்.
- ஜெபம் - கர்த்தரே, உங்களை மகிழ்வித்து மற்றவர்களுக்கு உதவும்படி ஜீவிக்க எனக்கு தெரியவில்லை. என்னுடைய வழிகள் தவறுகிறது. என் நினைவுகள் துன்புறுத்துகிறது. உம்முடைய வழிகளையும் நினைவுகளையும் தயவு செய்து சொல்லித்தாரும். நான் உம்மை விசுவாசிப்பதினால் உம்முடைய பரிசுத்த ஆவி வழிநடத்தட்டும்.
- பகிர்தல் - என்னுடைய நண்பருடன் இந்த வசனங்களை கடைப்பிடித்தலை பகிர்ந்துக்கொள்வேன். ஸ்டீவ், அவன் கஷ்டப்படுகிறான் அவன் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்களுக்கு வழி தேவை.
தொடர்கள் பைபில் ஸ்டடி. ஜூமே கருவிகளில் இது ஒரு சாதாரண கருவி.
செயல்பாடு
(30 min)
S.O.A.P.S. வேத வாசிப்பு
கூஅர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
மத்தேயு 6:9-13 ஐப் பயன்படுத்தி, எஸ்.ஓ.ஏ.பீ.எஸ் வேத வாசிப்பு முறை மூலம் தனித்தனியாக வேலை செய்யுங்கள். (20 நிமிடம்)
இரண்டு அல்லது மூன்று குழுக்களாகச் சென்று உங்கள் S.O.A.P.S முறையைப் பகிரவும். (10 நிமிடம்)
Scripture (வசனம்)
இன்று உங்களுக்கு, அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வசனங்களைப் பற்றிக் குறிப்பெழுதுக.
Observation (கவனித்தல்)
அந்த வசனங்களையோ குறிப்புகளையோ இன்னும் அதிகமாக விளங்கிக் கொள்ளும் படியாக, அதை உங்களுக்கு நன்கு புரியும் படி மீண்டும் எழுதுங்கள்.
Application (அப்பியாசப்படுத்துதல்)
உங்களுடைய சொந்த வாழ்க்கையிலே அவற்றிற்குக் கீழ்ப்படிவது எவ்வாறு அர்த்தம் நிறைந்ததாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
Prayer (ஜெபம்)
நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்களென்பதையும், எப்படி கீழ்ப்படிய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் ஜெபமாக எழுதி தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Sharing (பகிர்ந்து கொள்ளுதல்)
நீங்கள் கற்றுக் கொண்டதையோ அல்லது கீழ்ப்படிந்ததையோ யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரென்று அவரிடம் கேளுங்கள்.
S. O. A. P. S வேலை செய்யும் விதத்திற்கு ஒரு உதாரணம்:
S - "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல, என்று கர்த்தர் கூறுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்ததாயிருக்கிறது." (ஏசாயா 55:8-9)
O - ஒரு மனிதனாக, எனக்குத் தெரிவதும், காரியங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்ததும் குறைவே. ஆனால் கடவுளுக்கு எந்த எல்லையுமில்லை. அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், செய்கிறார். அவரால் எல்லாம் கூடும்.
A - தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிற படியாலும் அவரது வழிகள் சிறந்ததாய் இருப்பதாலும், நான் எனக்குத் தெரிந்த வழியில் காரியங்களை செய்வதை காட்டிலும் அவரது வழியில் செய்யும் போது மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
P - கர்த்தாவே, எனக்கு நல்வழியில் வாழ்வது எப்படி, மற்றவர்களுக்கு உதவுவது எப்படி என்று தெரியாது. என் வழிகள் தவறான காரியங்களுக்கு நேராய் என்னை வழிநடத்தும். என்னுடைய எண்ணங்கள் துன்பத்திற்கு நேராய் நடத்தும். உம்முடைய வழிகளையும் எண்ணங்களையும் எனக்குக் கற்பியும். நான் உம்மைப் பின்பற்றுவதற்கு உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்துவாராக.
S - நான் இந்த வசனங்களையும், செயல்பாடுகளையும் என் நண்பர் ஸ்டீவுடன் பகிர்ந்து கொள்வேன். அவர் கடினமான காரியங்களினூடே கடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் முக்கியமான முடிவுகளை எடுக்க அவருக்கு உதவி தேவை.
READ
(5 min)
பொறுப்புடைமை குழுக்கள்
இயேசு கூறினார் - நிறைய நிறைய ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும், பொறுப்பை மேலும் மேலும் குடுக்கப்பட்டவரிடம் கேட்கப்படும்.
இயேசு பொறுப்பை பற்றி பல கதைகளை பகிர்ந்தார் நாம் சொல்வதிலும் செயல்படுவதிலும் நாம் எப்படி பொறுப்பாவோம் என்று பல உண்மைகளை சொன்னார்.
இயேசு இந்த விஷயங்களை இப்போது கூறுகிறார், பிறகு நாம் தயாராகலாம். ஒரு நாள் நாம் அவருக்கு போருப்பாவதினால், இப்போதே ஒருவருக்கொருவர் பொருப்புடன் செயல்படுவது நல்லது.
பொறுப்புள்ள குழுக்கள் ஒரே இனமான இரண்டு மூன்று நபர்கள் கொண்டது - ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண் - எங்கெல்லாம் சரியாக செயல்படுகிறதோ எங்கெல்லாம் திருத்தம் தேவைப்படுகிறதோ அதை. கேள்விகளாக வாரத்தில் ஒரு முறை சந்தித்து பேசிக்கொள்ளலாம்.
இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் பொறுப்பாவார், அதனால் மற்றவர்களுடன் ஒவ்வொரு இயேசுவின் விசுவாசியும் பொறுப்புடன் செயல்படவேண்டும்.
பொறுப்புள்ள குழுக்கள். ஜூமே கருவிகளில் இன்னும் ஒரு சாதாரண கருவி.
செயல்பாடு
(20 min)
பொறுப்புடைமைக் குழுக்கள்
கூஅர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
ஒரே பாலினத்தவராய் இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழுக்களாய் பிரிக்கவும்.
அடுத்த 20 நிமிடங்களுக்கு பொறுப்புடைமை கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
- கடவுள் எப்படி உங்களில் வேலை செய்கிறார்?
- உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம், கிறிஸ்துவின் மகத்துவத்திற்காய் யாருக்கு சாட்சியாக இருந்தீர்கள்?
- நீங்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களைப் பார்ப்பதற்குத் தூண்டப்பட்டீர்களா அல்லது உங்கள் மனதை அதற்கு அனுமதித்தீர்களா?
- உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்துவதில் கடவுளுடைய உரிமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா?
- நீங்கள் எதையேனும் இச்சித்தீர்களா?
- உங்கள் வார்த்தைகளால் ஒருவரின் நற்பெயரை அல்லது உணர்ச்சிகளை நீங்கள் காயப்படுத்தியிருக்கிறீர்களா?
- உங்கள் வார்த்தை அல்லது நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட அல்லது நேர்மையற்றதாக இருந்ததா?
- நீங்கள் அடிமைத்தனமான [சோம்பேறி அல்லது ஒழுக்கமற்ற] நடத்தையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?
- நீங்கள் ஆடை, நண்பர்கள், வேலை, அல்லது உடைமைகளுக்கு அடிமையாக இருக்கிறீர்களா?
- நீங்கள் யாரையாவது மன்னிக்கத் தவறிவிட்டீர்களா?
- எப்படிப்பட்ட கவலைகள் அல்லது வருத்தங்களை எதிர்கொள்கிறீர்கள்?
- நீங்கள் புகார் சொல்லிக் கொண்டோ அல்லது முணுமுணுத்துக் கொண்டோ இருக்கிறீர்களா?
- நன்றியுள்ள இருதயத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?
- உங்கள் முக்கிய உறவுகளில் கௌரவம், புரிதல், மற்றும் தாராளம் இருக்கிறதா?
- சிந்தனை, வார்த்தை அல்லது செயலில் என்ன சோதனைகளை எதிர்கொள்கிறீர்கள், நீங்கள் அதற்கு எவ்வாறு பதிலளித்தீர்கள்?
- மற்றவர்களுக்கு, குறிப்பாக விசுவாசிகளுக்கு ஆசீர்வதிக்க அல்லது ஆசீர்வதிப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
- பிரார்த்தனைக்கு நீங்கள் குறிப்பிட்ட பதிலைக் கண்டிருக்கிறீர்களா?
சரிபார்த்தல்
(1 min)
இந்த அமர்வில் கேட்ட கருத்துக்கள்:
இந்த அமர்வில் கேட்ட முறைமைகள்:
- கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
- சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
- ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
- SOAPS வேத வாசிப்பு
- கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
NEXT STEP
கீழ்படி
அடுத்த கூட்டத்திற்கு முன்பதாய் S. O. A. P. S வேத வாசிப்பை பயிற்சி செய்யவும். மத்தேயு 5-7 ஐ ஒரு நாளைக்கு ஒரு முறையாவது படிக்கவும். S. O. A. P. S மாதிரியை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் குறிப்பெடுக்கவும்.
பகிர்ந்து கொள்
பொறுப்புக்கூறல் கூட்டாளரைக் (ஒரே பாலினம்) கண்டுபிடித்து வாரந்தோறும் அவர்களுடன் சந்திப்பைத் தொடங்குங்கள்.