tool

3 வட்டங்கள் நற்செய்தி வழங்குகல்

இந்தப் பக்கத்தை பகிருங்கள்

கடவுளின் கதையைப் பகிர்ந்து கொள்ள பல வழிகள் உள்ளன.

சிறந்த வழி என்பது, நீங்கள் பகிர்ந்து கொள்ளும் நபர், உலகத்தைப் பற்றிய அவர்களின் பார்வை மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பொறுத்தது. கேட்கத் தயாராக இருக்கும் இருதயங்களில் கிரியை செய்ய, பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கும் இருதயங்களை கடவுள் பயன்படுத்துகிறார். அது அவருடைய வேலை. அதில் இணைய அவர் உங்களை அழைக்கிறார்.

கடவுளின் கதையைப் பகிர்வதற்கான ஒரு வழி, நாம் மூன்று வட்டங்கள் என்று அழைக்கும் ஒரு எளிய வரைபடத்தைப் பகிர்வதும் விவரிப்பதும் ஆகும்.

[படம்_3வட்டங்கள்]

நாம் அனைவரும் மிகவும் சிதைந்து போன உலகில் வாழ்கிறோம்

துன்பம், மரணம், போர், நோய், அடிமையாதல் போன்ற காரியங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இது எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் இது கடவுளின் அசல் வடிவமைப்பு அல்ல.

கடவுளின் சரியான வடிவமைப்பு அன்பு, மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் அமைதி நிறைந்த உலகம்.

கடவுளின் பரிபூரண வடிவமைப்பிலிருந்து நாம் வெளியேறி, சிதைந்த நிலைக்கு வந்த விதத்தை வேதம் "பாவம்" என்று அழைக்கிறது.

பாவம் என்பது கடவுளின் வழியிலிருந்து விலகி, நம் சொந்த வழியைப் பின்பற்றுவதாகும். பாவம் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறது. பாவம் நம்மை சிதைந்த நிலைக்குத் தள்ளுகிறது. பாவம் நம்மை ஆவிக்குறிய மரணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

மக்கள் அந்த சிதைந்து போன நிலையிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். வெளியே வர எல்லா விதமான காரியங்களிலும் முயற்சி செய்கிறோம். நம்மில் சிலர் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹாலை முயற்சி செய்கிறோம். சிலர் ஒரு நல்ல வேலையின் மூலமாகவோ அல்லது நிறைய பணம் சம்பாதிப்பதன் மூலமாகவோ வெளியேற முயற்சி செய்கிறோம். சிலர் ஒரு உறவு அவர்களை வெளியேற்றும் என்று நினைக்கிறார்கள். சிலர் மதத்தை முயற்சி செய்கிறார்கள் -- நல்ல நடத்தை அல்லது மற்றவர்களுக்கு உதவுவது நம்மை விடுவிக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

இந்த விஷயங்கள் எதுவும் உண்மையில் முறிவு என்கிற பிரச்சனையை சரி செய்யவில்லை. நாம் ஒரு கணம், விலகிச் செல்வது போல் உணர்ந்தாலும்... தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் செல்கிறோம். இங்கே ஒரு கடினமான உண்மை என்னவெனில். நாம் இன்னும் அங்கே இருந்தால் -- இன்னும் உடைந்த நிலையில் -- இந்த வாழ்க்கை முடிவடையும் போது, ​​நாம் கடவுளிடமிருந்து எப்போதும்  நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறோம் என்று வேதம் கூறுகிறது..

வேதம் அந்த இடத்தை “நரகம்” என்று அழைக்கிறது.

ஆனால் நாம் சிதைந்த நிலையில் இருப்பதை கடவுள் விரும்பவில்லை.

வேதம் சொல்கிறது -- கடவுள் நம்மை மிகவும் நேசித்தார், அவர் நமக்காக ஒரு வழியை உருவாக்க தம் சொந்த குமாரனை அனுப்பினார். நம்முடைய பாவத்தை அழிக்கவும், உடைந்த நிலையிலிருந்து நம்மை அழைத்துச் செல்லவும் இயேசு பூமிக்கு வந்தார்.

ஆகவே, கடவுளின் குமாரனாகிய இயேசு, தம்முடைய மரணத்தின் மூலம் நம்முடைய பாவத்தை ரத்து செய்தார்.

இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவருடைய மகத்தான தியாகத்தின் காரணமாக, கடவுள் இயேசுவை பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்திற்கும் ராஜாவாக ஆக்கினார்.

ராஜா இயேசு நமக்காக, உடைந்த நிலையிலிருந்து ஒரு வழியை உருவாக்கினார். கடவுள் சொன்னார் ...

… நம் பாவத்திலிருந்து நாம் திரும்பி…

இயேசு நமக்காக மரித்தார் என்று நம்ப வேண்டும்...

மேலும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும்...

பின்னர் கடவுள் நம்மை -- இயேசுவைப் போலவே -- கடவுளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக -- என்றென்றும் ஒரு புதிய வகையான வாழ்க்கையில் நடக்க -- எழுப்புகிறார்.

உடைந்த உலகில் இந்தப் புதிய வாழ்க்கையை நாம் முன்மாதிரியாகக் கொண்டு, இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம், அப்போது அவர் ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்குவார், அங்கு நாம் அவருடன் எப்போதும் முழுமையுடன் இருக்க முடியும்.

நாம் அவருடனான உறவில் வளர வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். கடவுள் நம்மை மீண்டும் அவரது அசலான சரியான வடிவமைப்பில் மீட்டெடுக்க விரும்புகிறார்.

கடவுளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக, இயேசு நமக்கு ஒரு பணியைக் கொடுக்கிறார் - வாழ்வதற்கான ஒரு காரணம் - மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழி.

இயேசுவின் பணி நமக்கானது.

இயேசு நம்மை அனுப்புகிறார் -- அவருடைய பிதாவாகிய கடவுள் அவரை அனுப்பியது போல் -- பிறர் விடுபடவும், கடவுளின் குடும்பத்தின் ஒரு பகுதியாகவும் இருக்க உதவுவதற்காகவும் 

இந்த மூன்று வட்டங்களாகிய உலகில், இரண்டு வகையான மனிதர்கள் மட்டுமே உள்ளனர் --

கடவுளின் முழுமையான வடிவமைப்பின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் கடவுளின் மீட்புப் பணியை செய்கிறார்கள் ... கடவுளை அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைக்க உதவுகிறார்கள்.

அல்லது…

… இன்னும் உடைந்த நிலையில் உள்ளவர்கள் ... விடுபட எல்லாவற்றையும் முயற்சி செய்கிறார்கள் ... யாராவது காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள்

  • நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியுமா?
  • நீங்கள் எங்கு இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?

கடவுளின் கதையைப் பகிர்ந்து கொள்ள பல வழிகள் உள்ளன. முக்கியமான விஷயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேட்கத் தயாராக இருக்கும் இருதயங்களில் கிரியை செய்ய, பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கும் இருதயங்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். அது அவருடைய வேலை. அவருடன் இணைய நம்மை அழைக்கிறார்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  • இந்தக் கதையை நினைவிலிருந்து சொல்ல முடியுமா? பயிற்சியின் மூலம், அனைவரும் நற்செய்தி கதையைச் சொல்வதில் சிறந்து விளங்க வேண்டும். இப்போது நிறுத்தி 3 முறை பயிற்சி செய்யுங்கள்.
    • இந்தக் கதையில் மக்களைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
    • கடவுளைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
    • இப்படி ஒரு கதை சொல்வதன் மூலம் கடவுளின் கதையைச் சொல்வது எளிதாக இருக்கும் அல்லது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

இன்றே Zúme Training-ஐ தொடங்குங்கள்

இது முற்றிலும் இலவசம்; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்—எங்கு இருந்தாலும், உங்கள் சொந்த வேகத்தில் முன்னேறலாம்.

இலவசமாக பதிவு செய்யுங்கள்